Recent Posts

5/recent/Trending Tech

AI மூலம் பழைய வீடியோக்கள் ஹெச்.டி ஆக மாற்றும் வசதி... யூடியூப்-ல் வந்த சூப்பர் அப்டேட்

AI மூலம் பழைய வீடியோக்கள் ஹெச்.டி ஆக மாற்றும் வசதி... யூடியூப்-ல் வந்த சூப்பர் அப்டேட்


1/6
யூடியூப்பில் உள்ள பழைய லோ குவாலிட்டி வீடியோக்களை ஏஐ மூலமாக ஆட்டோமேட்டிக்காக ஹெச்.டி வீடியோக்களாக மாற்றிக்கொள்ளும் வசதியை யூடியூப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.


2/6
யூடியூப்பில் வீடியோக்கள் பார்க்கும் பார்வையாளர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு புதிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.


3/6
அந்த வகையில் 1080p என்ற தரத்துக்குக் குறைவாக பதிவிடப்பட்டுள்ள பழைய வீடியோக்கள் மற்றும் இனிமேல் பதிவிடவுள்ள புதிய வீடியோக்கள் போன்றவற்றை ஏஐ மூலமாக தரம் உயர்த்த யூடியூப் முடிவு செய்துள்ளது.

4/6
4K, ஹெச்.டி மற்றும் அல்ட்ரா ஹெச்.டி வரைக்கும் ஏஐ மூலமாக வீடியோக்களின் தரத்தை உயர்த்த யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


5/6
செட்டிங்ஸ் பகுதியில் உள்ள Super Resolution என்ற ஆப்சனை தேர்வு செய்து ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் யூடியூப் நிறுவனமே வீடியோக்களை ஆட்டோமேட்டிக்காக தரம் உயர்த்திக் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


6/6
வீடியோக்களை தரம் உயர்த்த சம்மதம் தெரிவிக்கும் கணக்குகளுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Comments