உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், இந்த வாரம் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான இவருக்கு, பங்குதாரர்கள் ஒன்று கூடி, ஒரு பெரிய சம்பள திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை பெற்ற அடுத்த நிமிடமே மேடை ஏறிய மஸ்க், அதைவிட பிரம்மாண்டமான ஒரு புதிய கனவை அறிவித்தார். அதுதான் அவருடைய 'ஆப்டிமஸ்' (Optimus) என்ற மனிதன் போல இருக்கும் ரோபோ.
இந்த ஆப்டிமஸ் ரோபோ, எதிர்காலத்தில் உலகில் உள்ள வறுமையே இல்லாமல் செய்துவிடுமாம், மக்கள் வேலைக்கு போக வேண்டிய தேவையே இருக்காதாம். ஏன், குற்றவாளிகளை கூட இந்த ரோபோ கண்டுபிடித்து தடுத்துவிடுமாம். இந்த ரோபோக்கள் மூலம் உலகப் பொருளாதாரம் 100 மடங்கு வரை உயரும் என்று மஸ்க் நம்புகிறார். இது, மனிதர்கள் வேலை பற்றிச் சுத்தமாக கவலைப்பட தேவையில்லாத சந்தோஷம் நிறைந்த எதிர்காலத்தை தரும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு மில்லியன் ரோபோக்கள் திட்டம் : "வறுமையை ஒழிப்பது, அனைவருக்கும் நல்ல மருத்துவம் கொடுப்பது பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், இதைச் செய்ய ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதுதான் இந்த ஆப்டிமஸ் ரோபோ" என்று பங்குதாரர்கள் கூட்டத்தில் மஸ்க் கூறியுள்ளார். மேலும், இந்த மனித உருவ ரோபோக்கள் இப்போதுதான் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை இன்னும் முழுமையாக வேலை செய்ய தொடங்கவில்லை. ஆனால், இந்த ரோபோக்கள் எதிர்காலத்தில் மனிதர்களின் உழைப்பையே தேவை இல்லாததாக மாற்றிவிடும். சாதாரண ஒரு மனிதனை விட 5 மடங்கு அதிகமாகவும், வேகமாக வேலை செய்யும் திறனும், இரவு பகல் பாராமல் வேலை செய்யும் திறனும் ஆப்டிமஸ் ரோபோவுக்கு இருக்கும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
குற்றங்களை தடுக்கும் ரோபோக்கள் : போதுமான அளவுக்கு இந்த ரோபோக்களை வேலைக்கு அனுப்பினால், மனித இனம் பணத்தை பற்றி கவலைப்பட தேவையில்லாத ஒரு காலத்திற்குள் செல்லும். அப்போது எல்லோரும் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்க முடியும் என்றும் அவர் நம்புகிறார். மஸ்க்கின் இந்த பெரிய கனவு, பொருளாதாரத்தோடு மட்டும் நிற்கவில்லை. சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதிலும் ஆப்டிமஸ் உதவும் என்று அவர் சொல்கிறார்.
Now Playing
en-Are-jeans-too-tight-or-too-big-for-you-try-these-hacks
Up Nexten-do-you-know-these-everyday-items-are-toxic
en-saw-these-dreams-recently-do-you-know-what-it-means
en-things-pilots-are-not-allowed-to-do-on-board
en-what-does-the-music-in-your-playlist-reveal-about-your-personality
சிறைச்சாலைகளை கட்டுவதற்குப் பதிலாக, இந்த ரோபோக்கள் குற்றம் செய்ய நினைப்பவர்களை பின் தொடர்ந்து சென்று, அவர்கள் தவறு செய்ய விடாமல் தடுத்துவிடும் என்று அவர் கூறுகிறார். ஒரு டெஸ்லா ரோபோ நம்மை 24 மணி நேரமும் கண்காணிக்கிறது என்றால், அது எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
மேலும், அமெரிக்கா தற்போதுள்ள பெரிய கடன் பிரச்சனையில் இருந்து வெளியேற, இந்த செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும் மட்டுமே ஒரே வழி என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். "இந்த தொழில்நுட்ப சொர்க்கத்தை அடைவதற்கான பாதை அவ்வளவு சுலபமாக இருக்காது. நிறைய சிக்கல்களும் போராட்டங்களும் இந்த வழியில் வரும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த ரோபோக்கள் விற்பனைக்கு வரும்போது, ஒரு சாதாரண கார் விலையான 20,000 டாலர் முதல் 30,000 டாலர் வரை இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
English summary
Elon Musk USD 1 Trillion Pay Package Approved Tesla Robots Aim to Tackle Poverty and CrimeElon Musk made headlines this week after Tesla shareholders approved his staggering $1 trillion pay package. On stage, he unveiled an ambitious vision for his humanoid robot, Optimus, claiming it could end poverty, make work optional, and potentially control crime. Musk said Optimus could "eliminate poverty," increase the global economy up to 100 times, and create a future of "sustainable abundance," where humans no longer need to worry about jobs.
.jpeg)
0 Comments