Recent Posts

5/recent/Trending Tech

நீங்க AI உடன் பேசிய எல்லா டேட்டாவும் அவ்வளவு தான்..


சென்னை: இந்தக் காலத்தில் ஏஐ பயன்பாடு பரவலாக அதிகரித்து வருகிறது. நம்மில் பலரும் கூட ஒரு சந்தேகம் என்றால ஏஐ டூல்களிடமே கேட்கிறோம். இதற்கிடையே ஏஐ உடனான யூசர்களின் டேட்டாவை எல்லாம் எடுக்க பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முடிவு செய்துள்ளது. மெட்டா இந்த முடிவை எடுக்கக் காரணம் என்ன! இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

ஏஐ வளர்ச்சி சமீப ஆண்டுகளாக மிக வேகமாக இருக்கிறது. நாம் எதிர்பார்க்காத இடங்களிலும் கூட ஏஐ வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஏஐ பல்வேறு வழிகளிலும் மனிதர்களுக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது. நமது வாழ்க்கையையும் எளிமைப்படுத்துகிறது. அதேநேரம் ஏஐ மூலம் சில பிரச்சனைகளும் கூட ஏற்படலாம் என வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். ஏஐ சாட்கள் அதில் குறிப்பாகத் தனியுரிமை சார்ந்த கேள்விகளே அதிகம் இருக்கிறது. அதேபோல பலரும் ஏஐ சாட் பாட்களிலும் பெர்சனல் விஷயங்களைக் கூட பகிர்கிறார்கள். 

இது அவர்களுக்கே கூட சிக்கலைத் தரலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கிடையே ஏஐ உடன் யூசர்களின் உரையாடல் டேட்டா முழுவதையும் எடுக்கப் போவதாக பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனம் சொந்தமாக மெட்டா ஏஐ என்ற ஏஐ டூலை வைத்திருக்கிறது. இந்த மெட்டா ஏஐ உடன் யூசர்கள் நடத்திய உரையாடல் டேட்டாவை தான் அந்நிறுவனம் எடுக்கப் போகிறது. அதாவது AI போட்டில் யூசர்களின் உரையாடல் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட மெட்டா முடிவு செய்துள்ளது. டிசம்பர் 16 முதல், மெட்டா AI உடனான யூசர்கள் உரையாடல்களில் இருந்து பெறப்படும் டேட்டா விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. Also Read உலகம் எப்போது அழியும்? ரொம்ப நேரம் யோசித்த AI.. கடைசியில் சொன்ன பதில்.. ரொம்ப பயங்கரமா இருக்கே விளம்பரங்கள் யூசரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் தோன்றும் விளம்பரங்களைத் தீர்மானிக்க இது உதவும் என்று மெட்டா தெரிவித்துள்ளது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான மெட்டா AI யூசர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் அனைவரின் டேட்டாவையும் பயன்படுத்த பேஸ்புக் முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக எல்லா யூசர்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் அக்டோபர் 7 முதல் மெசேஜ் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன புது விளம்பரம் விளம்பரங்களில் personalised ads என ஒன்று இருக்கிறது. அதாவது டிவி, செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் பொதுவான விளம்பரங்கள். அவை தேவைப்படாதவர்களுக்கும் சென்று சேரும். அதாவது ரியல் எஸ்டேட் விளம்பரம் போட்டால் அது வீடு வாங்க விரும்பாத அல்லது ஏற்கனவே சொந்தமாக வீடு வைத்திருக்கும் நபருக்கும் சென்று சேரும். மறுபுறம் personalised ads என்பது அந்த நபருக்குத் தேவையான விளம்பரத்தைச் சரியாகக் காட்டுவதாகவும். உதாரணத்திற்கு ஒரு ரியல் எஸ்டேட் குறித்து இணையத்தில் தேடினால்.. அவர் வீடு வாங்க ஆர்வமாக இருப்பதாக அர்த்தம். எனவே, அவருக்கு மட்டும் ரியல் எஸ்டேட் விளம்பரம் காட்டும். இதுபோல ஒவ்வொரு நபருக்கும் ஏற்ற விளம்பரங்கள் காட்டப்படும்.. இப்படி இணையத்தில் ஒவ்வொரு நபருக்கும் ஏற்ற விளம்பரம் காட்ட முடியும் என்பதாலேயே அதில் விளம்பரம் செய்யப் பலரும் விரும்புகிறார்கள். 

 சீக்ரெட்டை உடைத்த பிரபலம்.. ரிஸ்க் ஆச்சே வரம்புகள் வெறுமன தேடுவதை மட்டும் வைத்து விளம்பரம் காட்டுவதை விட இதுபோல சாட்களில் நடந்த உரையாடலை வைத்து விளம்பரத்தைக் காட்டினால் அது இன்னும் துல்லியமாக இருக்கும் என மெட்டா கருதுகிறது. இதன் காரணமாகவே அந்தத் திட்டத்தை மெட்டா கையில் எடுத்துள்ளது. அதேநேரம் இதில் சில வரம்புகளும் உள்ளன. மதம், ஹெல்த், பாலியல் சார்பு, அரசியல் உள்ளிட்ட முக்கியமான தலைப்புகள் தொடர்பான உரையாடல்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படாது என்று மெட்டா தெளிவுபடுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments

Comments