Recent Posts

5/recent/Trending Tech

உலகளவில் முடங்கிய பேஸ்புக்; லட்சக்கணக்கான பயனர்கள் பாதிப்பு.!!!




மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளம் உலகளாவிய ரீதியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறால் முடங்கியுள்ளதாக ஆயிரக்கணக்கான பயனர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த திடீர் கோளாறு காரணமாக பல பயனர்களால் தங்களது பேஸ்புக் கணக்குகளில் உள்நுழைய (Login) முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், நியூஸ் பீட் (News Feed) புதுப்பிக்கப்படாதது, பதிவுகள் ஏற்றப்படாதது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்கள் பதிவாகியுள்ளன.

மேலும், சில பயனர்களுக்கு "Account Temporarily Unavailable" என்ற பிழைச் செய்தி திரையில் தோன்றுவதாகவும், இதனால் சேவையைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பக் கோளாறு உலகின் பல நாடுகளில் பதிவாகியுள்ள நிலையில், பிரச்சினைக்கான காரணம் குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடவில்லை. சேவையை வழக்கமான நிலைக்கு மீட்டெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது

Post a Comment

0 Comments

Comments