இந்த Ray-Ban Meta கண்ணாடிகளை அணியும்போது நிஜ வாழ்க்கையில் பங்கெடுக்கும்போதே, டிஜிட்டல் தகவல்களை அறிந்திருக்க முடியும்.
மெட்டா நிறுவனம் கடந்த புதன் (செப் 17) அன்று புதிதாக இரண்டு ரே-பான் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வலது லென்ஸில் செயலிகள், செய்திகள், அறிவிப்புகள், திசைகளைக் காட்டும் வகையில் திரை (டிஸ்ப்ளே) அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்ணாடியின் கட்டுப்பாட்டு மையமாக மணிக்கட்டுப் பட்டை செயல்படும். Meta Neural Band என அழைக்கப்படும் இந்தப் பட்டை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அணிந்துகொண்டு கையால் சில சைகைகளைச் செய்வதன் மூலம் கண்ணாடியைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த பேண்ட் தண்ணீரால் பாதிக்கப்படாத வண்ணம், ஒருமுறை சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு சாதனத்தை கையாள்வது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும் என்கின்றனர்.
மெட்டாவின் வருடாந்திர நிகழ்வான மெட்டா கனெக்ட் 2025-ல் மார்க் சக்கர்பெர்க் இந்தக் கண்ணாடியை அறிமுகப்படுத்தும்போது, மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே Meta Ray-Ban Display என அழைத்தார்.
இந்தக் கண்ணாடியை அணிந்திருக்கும்போது மொபைலை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்கின்றனர். கால் பேசுவது, புகைப்படம் எடுப்பதைக் கடந்து, வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் ஆப்களை இதில் பயன்படுத்த முடியும். புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்க முடியும். இதில் மெட்டா ஏஐ அசிஸ்டண்ட் வசதியும் உள்ளது.

இந்தக் கண்ணாடிகளை அணியும்போது நிஜ வாழ்க்கையில் பங்கெடுக்கும்போதே, டிஜிட்டல் தகவல்களை அறிந்திருக்க முடியும்.
வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் இந்தக் கண்ணாடியை வாங்க முடியும். இதன் விலை 799 அமெரிக்க டாலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 70,402 ரூபாய். முதல் கட்டமாக அமெரிக்க சந்தையில் மட்டுமே இது விற்பனைக்கு வருகிறது.
இந்தக் கண்ணாடி மெட்டா மென்பொருள் தளத்தில் இயங்கும். ஆப்பிள் போல ஸ்மார்ட்ஃபோன் இல்லாமலே மெட்டா ஈகோ சிஸ்டத்துக்குள் வாடிக்கையாளர்களைக் கொண்டுவரும் முயற்சியாக மெட்டா இதனைச் செய்துள்ளது.
0 Comments