வாட்ஸ் ஆப்பில் ஏற்கெனவே மெட்டா ஏஐ செயலி இருப்பதால், அதற்கு போட்டியாகவே Chat GPT இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
ஓபன் ஏஐ நிறுவனம் சோதனை முயற்சியாக 1-800-ChatGPT என்ற சேவை எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நீங்கள் உங்கள் மெஸ்ஸேஜிங் ஆப் மற்றும் வாட்ஸ்ஆப்பில் இந்த எண்ணை சேவ் செய்து சேட் ஜிடிபியுடன் உரையாடலாம்.
இதனால் உங்களுக்கு தனியான செட் ஜிபிடி ஐடி இருக்க வேண்டிய அவசியமில்லை. கூடுதலாக ஒரு ஆப்பை மொபைலில் வைத்திருக்க வேண்டியதில்லை.
வாட்ஸ் ஆப்பில் ஏற்கெனவே மெட்டா ஏஐ செயலி இருப்பதால், அதற்கு போட்டியாகவே சேட் ஜிபிடி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
1-800-CHATGPT என டயல் செய்து அந்த எண்ணுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பினால் சேட் ஜிபிடியிடம் இருந்து பதில் வரும். இந்த எண்ணை சேவ் செய்து பயன்படுத்தலாம். இந்த எண்ணி செயல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ளவர்கள் 1-800-242-8478 என்ற எண்ணை பதிவுசெய்து பயன்படுத்தலாம். இந்தியாவில் இப்படி எண்களை பதிவு செய்து பயன்படுத்தும் வசதி இல்லை.
ஆனால், அதற்கு மாற்றாக Chat Gpt வலைத்தளத்தில் கொடுத்துள்ள QR கோடைப் பயன்படுத்தலாம்.
சேட் ஜிபிடிக்கென ஐடி இல்லாமல் இப்படி எளிமையாக பயன்படுத்துவதால் ஏஐ உபயோகத்தை பிரபலப்படுத்துவதே சேட் ஜிபிடியின் எண்ணம் என அவர்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
வாட்ஸ் ஆப்பில் சேட் ஜிபிடியுடன் உரையாட இந்த லின்கையும் பயன்படுத்தலாம்....https://api.whatsapp.com/message/5I7TW3PYBHQGE1?autoload=1&app_absent=0
வாட்ஸ்ஆப்பில் ஏற்கெனவே மெட்டா ஏஐ வசதி இருக்கும்போது சேட் ஜிபிடியை நீங்கள் பயன்படுத்துவீர்களா? கமண்டில் தெரிவியுங்கள்!
0 Comments