Recent Posts

5/recent/Trending Tech

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவால் இந்த பிரச்னை ஏற்படும்.. Nvidia சி.இ.ஓ. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்



புதிய வேலைகள் உருவாகி, கண்டுபிடிக்கப்படும். AI-ன் விளைவாக ஒவ்வொரு வேலையும் மாறும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்


1/8
அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமின்றி இந்தியாவிலும் ஏஐ தொழில்நுட்ப பயன்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.



2/8
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தரப்பினரிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.


3/8
இந்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தும்போது ஏற்படும் விளைவுகள் குறித்து கணினிகளுக்கான கிராபிக்ஸ் கருவிகளை வழங்கும் முன்னணி நிறுவனமான Nvidia தலைமை செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங் கூறியதாவது-


4/8
செயற்கை நுண்ணறிவு நம் வேலையைக் குறைத்து, அதிக ஓய்வு நேரத்தை உருவாக்கும் என்று பலர் நம்புகின்றனர்.


5/8
ஆனால் நாம் எதிர்காலத்தில் இப்போது இருப்பதைவிட இன்னும் பிஸியாக இருக்கப் போகிறோம் என்று சொல்லவே நான் பயப்படுகிறேன்


6/8
மனிதர்கள் ஒரு வேலையைச் செய்து முடிக்க அதிக நேரம் காத்திருக்கிறார்கள். ஆனால், AI மிக விரைவாக வேலைகளை முடிக்கும் என்பதால், நமக்கு மேலும் பல புதிய யோசனைகளைச் செயல்படுத்த நேரம் கிடைக்கும்.


7/8
அதனால் நாம் இப்போது இருப்பதை விடவும் எதிர்காலத்தில் இன்னும் பிஸியாக இருப்போம்


8/8
புதிய வேலைகள் உருவாகி, கண்டுபிடிக்கப்படும். AI-ன் விளைவாக ஒவ்வொரு வேலையும் மாறும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Comments