செயற்கை நுண்ணறிவு (AI) வந்தது முதல் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் மாற்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. தொழில்களை தானியங்கியாக்கும் இந்த தொழில்நுட்பம், பல முன்னணி நிறுவனங்களில் வேலை இடங்களைக் குறைக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இதன் தீவிர விளைவுகள் குறித்து தற்போது அமெரிக்காவின் லூயிஸ்வில் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர் ரோமன் யம்போல்ஸ்கி முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
“2030 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 90% தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது, அந்த வேலை இழப்புக்கு மாற்றாக “ஆப்ஷன் பி” எதுவும் இல்லையென்று தன்னம்பிக்கையுடன் கூறியிருக்கிறார். “ஏஐ, மென்பொருள் டெவலப்பர்கள் மற்றும் ப்ராம்ப்ட் இன்ஜினியர்களையும் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய காலங்களில் பல பெரும் நிறுவனங்கள் தங்கள் செலவுகளை குறைப்பதற்காக ஏஐ வசதிகளை பயன்படுத்தி மனிதவளத்தை குறைக்க ஆரம்பித்துள்ளன. இதில், டெக்னாலஜி நிறுவனங்கள் முதல் வங்கிகள் வரை எந்தத் துறையும் விலகவில்லை. இந்த சூழலில், யம்போல்ஸ்கியின் எச்சரிக்கை தொழில்துறை வட்டாரத்தையும், தொழிலாளர்களையும் பெரிதும் சிந்திக்கவைத்துள்ளது. “வேலைகளை இழப்பதை காட்டிலும் வேகமாக ஏஐ வளர்கிறது” என்பது அவருடைய எச்சரிக்கையாகும்.
👩💻இதில் பதிவிடும் தகவல் அனைத்தும் தொழிநுட்பம் சம்பந்தப்பட்டவையாகவே இருக்கும் என்பதில் கூறிக்கொள்கிறோம் 📲WhatsApp Link ...
0 Comments